KIDS NEST PLAY SCHOOL தங்களை அன்புடன் வரவேற்கிறது.

KIDS NEST PLAY SCHOOL & TOLLER HOME ஈரோடு மாநகரில் பழையபாளயம் சாலையில் ஜெய் நகரில் 3 வது அவன்யூவில்  இயங்கி வரும் இந்நிறுவனம் மிகச் சிறு குழந்தைகளுக்கான சிறப்பு பாதுகாப்பு மற்றும் கல்வி மையமாகும்.

தமது குழந்தைகள் நீங்கலாக சிறு குழந்தைகளை பாதுகாப்பது, அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வது, அவர்களுக்கு கற்றுக் கொடுப்பது போன்றவை உண்மையில் ஒரு சவாலான காரியமாகும்.

ஏனெனில் தங்கள் உணர்வுகளை சரியாக வெளிபடுத்த தெரியாத சிறு குழந்தைகள் நாம் அவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றாவிட்டால் மிகுந்த ஏக்கத்துடன் அழத் தொடங்கி விடுகிறார்கள். தொடர்ச்சியான அழுகை மற்றும் ஏக்கம் காரணமாக அக்குழந்தைகளின் இயங்கு சக்தி வீணாவதுடன் அது குழந்தையின் வளர்ச்சி விகிதத்தை பாதிப்பதுடன் அவர்களுக்கு சீரற்ற மனநிலையையும் ஏற்படுத்துகிறது. வேலைக்கு செல்லும் பெற்றோர் தங்கள் குழந்தைகளை கவனிக்க முடியாத வேதனையில் உழன்று வருவது கண் கூடு.

ஈரோடு மாநகரில் 2000 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் KIDS NEST PLAY SCHOOL & TOLLER HOME மேற்கண்ட பிரச்சனைகளை கையாளுவதில் தனித் திறமையுடன் விளங்குகிறது. இப்பள்ளியின் இயக்குநர்களாக செயல் படும் திருமதி பர்வதம் ராமசாமி B.A,  அவர்களும், வித்யா சதீஷ் B.A., அவர்களும் சிறந்த சேவை மனப்பாண்மை, அர்பணிப்பு உணர்வுகள் மற்றும் கடும் உழைப்பையும் நல்கி இந் நிறுவனத்தை வழிநடத்தி வருகின்றனர்.

இயற்கையான காற்றோட்டமுள்ள பசுமை சூழ்நிலை, அழகிய விளையாட்டு உபகரணங்கள், பாதுகாப்பான நீச்சல் குளம், கனிவான ஆயாக்கள் மற்றும் பணியாளர்கள், சுகாதாரமான சுவையான குழந்தைகளுக்கான உணவு வகைகள் என இப்பள்ளி ஏனைய குழந்தைகள் பள்ளிகளுக்கு ஒரு முன் மாதிரியாக திகழ்ந்து வருகிறது.

எட்டு மாத குழந்தைகள் முதல் அனைத்து சிறு குழந்தைகளையும் இங்கு மிக அற்புதமாக பராமரித்து வருவதுடன் அவர்களுக்கு அலுப்பூட்டாத வகையில்  கற்றும் கொடுக்கிறார்கள்.

மேலும் இம்மையத்தில் மாலை நேரங்களில் ஒன்பதாம் வகுப்பு வரை மாணவ மாணவியருக்கு டியூசனும் எடுப்பதுடன் விருப்பமுள்ளவர்களுக்கு ஓவியம், பரதம், கீ போர்டு, இசை, ஸ்போக்கன் இங்லிஷ், இந்தி பயிற்சி போன்ற வகுப்புகளும் அத் துறைகளில் திறமையான ஆசிரியகளின் வழியாக வழிநடத்தப்படுகின்றன.

சிறப்பம்சங்கள்

*குழந்தைகளுக்கான உணவு வகைகள் இயக்குநர்களின் மேற்பார்வையில் தயாரிக்கப்பட்டு சரியான நேரங்களில் வழங்கப்படுகின்றன. வீட்டு உணவுகள் அனுமதிக்கப்படுவதில்லை.

*ஒவ்வொரு வருடமும் ஆண்டு விழாக்களின் போதும் போட்டித் தேர்வுகள், பேன்சி டிரஸ் போட்டிகள், பாட்டு போட்டிகள், நடன போட்டிகள், கதை சொல்லும் மற்றும் ஓவிய போட்டிகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பெற்றோர்களுக்கான போட்டிகளும் சிறப்பாக  நடத்தப் படுகின்றன.   

*அனைத்து சமய பண்டிகளும் குழந்தைகளின் மூலமாக சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

 

HOME ABOUT  US TAMIL CURRICULUM GALLERY NOTICE LIBRARY CONTACT

 

 A2V VISITOR COUNTER

OUR VISITOR COUNTER

Responsible Kid's Nest - Erode, for all the information you find on this page.

This web page developed and maintained  by A2V web service.  Click here for advertisement and more details.

COMPLETED  -TITLE-ANALYTICS-LINKS-INSIDE SEARCH-LOGIN